கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மது விலக்கு போலீசார் நேற்று மேல சரக்கல்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்றதாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த உதயராஜ் (வயது 26) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.