நாகர்கோவில்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

75பார்த்தது
நாகர்கோவில்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
நாகர்கோவிலில் தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்த பா. ஜனதா கட்சி பிரமுகர் பாரத் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா. ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று மாலையில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அப்போது அவர்கள், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துக் கொண்டனர். 

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை மேயர் மகேஷ் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ராஜரத்தினம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் ஜீவா, சேக்மீரான், வட்ட செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க.வில் இணைந்த பாரத், 52-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் ரமேஷ்சின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you