கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கண்ணன் குளத்தை சேர்ந்தவர் மலுக் முகமது இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றிருந்தார். நேற்று அவர் வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த வெள்ளிக் கம்ப்யூட்டர், இன்வெர்ட்டர் போன்ற பொருட்கள் திருட்டுப் போயிருந்தன. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.