ஆசாரிபள்ளத்தில் பேராசிரியை கணவரை தாக்கிய 10 பேர் மீது வழக்கு

2பார்த்தது
ஆசாரிபள்ளத்தில் பேராசிரியை கணவரை தாக்கிய 10 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் ஸ்காட் நகரைச் சேர்ந்த லாட்ஸ் பாபுவின் மனைவி, மார்த்தாண்டம் தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணிபுரிகிறார். சம்பவத்தன்று, லாட்ஸ் பாபு நாகர்கோவிலில் காரில் சென்று கொண்டிருந்தபோது, 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தாக்கிவிட்டு தப்பியோடியது. படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மின்மினி நகரைச் சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக் மற்றும் ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்த ரகுமான்கான் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி