கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் முந்திரி தொழிற்சாலை உரிமையாளர்கள் நேற்று மனு அளித்தனர். நித்திரவிளை பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு முந்திரி பருப்புகளை ஏற்றி வந்த 3 லாரி டிரைவர்கள், வழியில் தனி நபர்களுக்கு முந்திரி பருப்புகளை விற்பனை செய்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களை கைது செய்த பின்னரும், தங்கள் பொருட்களை போலீசார் மீட்டுத் தரவில்லை என தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.