கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம்.

1பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து 6.30 மணிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் எம். சி. ராஜன் திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். முளகுமூடு வட்டார முதல்வர் டேவிட் மைக்கேல் மறையுரை ஆற்றினார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை அருட்பணியாளர் டோனி ஜோரோம், இணை பங்கு அருட்பணியாளர் ருடால்ப் சங்கித், பங்குபேரவை துணை தலைவர் இர்வின் ஜியோ நேவிஸ், செயலர் மரிய ஜாண் சேவியர், பொருளர் மெர்லின் சேவியர், துணை செயலர் கிறிஸ்டிகன் ராணி மற்றும் அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி