கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நேற்று (ஜூலை 5) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வாகன கட்டண வசூலை திரும்ப பெற வேண்டும், நடைபாதைகளை சீர் செய்ய வேண்டும், சாலையில் சாக்கடை நீர் ஓடுவதை தடுக்க வேண்டும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச ஸ்கேன் வசதி உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.