நாகர்கோவில் வடசேரி ராஜேஷ் திரையரங்கம் அருகே நேற்று கடையின் வெளிப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடமிருந்து ரூபாய் 40,000 மற்றும் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்த தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க, பணம் மற்றும் செல்போனை பறிகொடுத்த நபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.