வடசேரியில் சாலையில் மயங்கி விழுந்து முதியவர் சாவு.

0பார்த்தது
வடசேரியில் சாலையில் மயங்கி விழுந்து முதியவர் சாவு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கட்டையன்விளை பகுதியைச் சேர்ந்த 71 வயது தொழிலாளி ராஜா, வீட்டின் அருகே கடைக்குச் சென்று திரும்பும்போது திடீரென மயங்கி சாலையில் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.