கன்னியாகுமரி மாவட்டத்தில் இம்மாதம் 23ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் பணிகளை ஒட்டி, 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க, தேர்தல் பார்வையாளர்கள் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.