நவம்பர் 21 அன்று உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் அருகே கிருஷ்ணன் கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் பங்குதந்தை ஆன்றனி புருனோ தலைமையில் மீனவ பிரதிநிதிகள் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான உள்நாட்டு மீனவர்கள் கலந்து கொண்டனர்.