நாகர்கோவில் வடசேரி டிஸ்ட்ரி ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி முன் சாலையோரமாக நேற்று முன்தினம் ஒரு தங்க நகை கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற சிவகுமார் என்பவர் பார்த்தார். பின்னர் நகையை எடுத்து வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதை போலீசார் ஆய்வு செய்தபோது அந்த நகை ஒரு பவுன் எடை கொண்டது என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நகையின் உரிமையாளர் டார்வின் என்பது தெரிய வந்தது. வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்ட அவர் வெளியே கொண்டு வந்தபோது எதிர்பாராத விதமாக தவறவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து டார்வினை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து நகையை போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த தங்க நகையை பத்திரமாக மீட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த சிவகுமாரை போலீசார் பாராட்டினர்.