குமரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பிரதாப் நேற்று (மே 31) பொறுப்பேற்றுக் கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரி மாவட்டம் படித்தவர்கள் அதிகம் நிறைந்த பகுதி என்றும், மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் மகிழ்ச்சியுடன் திரும்ப தேவையான மேம்பாட்டு நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.