நாகர்கோவில் கோட்டார் கலைநகர் பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர், வேலைக்குச் சென்றிருந்தபோது அவரது வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 54 கிராம் தங்க மோதிரத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சுதாகர் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.