நாகர்கோவில் வடசேரி மேலகாமராஜபுரம் சக்ரியா தெரு வைச் சேர்ந்தவர் பைசல்தீன் (வயது 40). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தங்கையின் வீட்டு காங்கிரீட் வேலை உதவிக்காக பைசல்தீனும், அவருடைய குடும்பத்தாரும் வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் ஒரு பகுதியில் வைத்து விட்டு சென்றனர். இரவு சுமார் 9.30 மணி அளவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 கிராம் எடையுள்ள தங்க கம்மலை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தது தெரிய வந்தது. திருட்டுப் போன கம்மலின் மதிப்பு ரூ.11,250 இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து பைசல்தீன் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.