கராத்தே பயிற்சி மையம் சார்பாக கராத்தே போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கருப்பு பட்டை வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கராத்தே பயிற்சி பள்ளியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்கள் ஓடு உடைத்தும், பல வீர சாகசங்கள் செய்து தங்களது சாதனையை வெளிப்படுத்தினர். கராத்தே போட்டியில் தேர்ச்சி பெற்ற 27 மாணவ, மாணவிகளுக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்டது.