கருங்கல்: குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

1860பார்த்தது
கருங்கல்: குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
கருங்கல் அருகே கஞ்சிகுழி பகுதியில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், குமரி போலீசின் நிமிர் குழுவினருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், சிறுமியின் தாயார் உறவினர் ஒருவருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்க இருந்ததும், சிறுமியின் ஆதார் கார்டை பெற்றோர் கொடுக்க மறுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். குழந்தை திருமணம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி