கன்னியாகுமரி: பள்ளி மாணவிகள் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைப்பு

1344பார்த்தது
கன்னியாகுமரி: பள்ளி மாணவிகள் தங்கச் சங்கிலியை கண்டெடுத்து ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், காட்டுபுதூர் பேருந்தில் இருந்து இறங்கிய பள்ளி மாணவிகள், பேருந்தில் கிடந்த சுமார் 6 கிராம் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த தங்கச் சங்கிலியை தவறவிட்டவர்கள், உரிய ஆதாரங்களுடன் கோட்டார் காவல் நிலையத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என உதவி ஆய்வாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி