கன்னியாகுமரி மாவட்ட தென் மண்டல CSI பேராலயத்தின் 68வது ஆண்டு நிறைவு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிஎஸ்ஐ பேராயர் பங்கு தந்தை கிறிஸ்டோபர் விஜயன் தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
விஜய் வசந்த், ராபர்ட் பூரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர். சட்டமன்ற உறுப்பினர்கள் டிடி பிரவீன், ஆஸ்டின், செல்லச்சாமி, தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.