குமரி: கணவன், மனைவி இறப்பில் திடீர் திருப்பம்

1363பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் செந்தில்குமார் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று செந்தில்குமாரின் உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் SP-ஐ சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கணவன்-மனைவி இருவரையும் ஒரு மர்ம கும்பல் கொலை செய்துள்ளதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி