கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 27) ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வகையில் அநியாயமாக உயர்த்தப்பட்ட உரம் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்து தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர்.