நாகர்கோவில் அருகே என்ஜிஒ காலணியில் உள்ள அன்பையா என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து சுமார் ₹1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்கவும், திருட்டுப் போன நகைகளை மீட்கவும் இரண்டு தனிப்படைப் பிரிவுகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.