நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்தின் முன்பு, தேசியக்கொடி கிழிந்த நிலையில் பறந்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடி சட்டத்தின்படி இது அவமரியாதையான செயலாகும். எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக அந்தப் பழைய கொடியை அகற்றிவிட்டு, புதிய தேசியக்கொடியை ஏற்றி நாட்டின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.