கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியைச் சேர்ந்த டார்வின் என்ற பெண்மணி, மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடையில் நகை சீட்டு செலுத்தி வந்துள்ளார். சீட்டு முடிந்து நகை வாங்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே நகையை வாங்கிவிட்டதாகக் கடை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது பணத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.