நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா திருக்கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, விடுமுறை நாளான இன்று (ஆக. 15) ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் அபிஷேகம் செய்து, தங்கள் தோஷங்கள், குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தடைகள் நீங்க வழிபட்டனர்.