கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இறந்து போன ஆடு, மாடுகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று அருந்ததியர் தெரு மற்றும் இடலாக்குடி பகுதியில் உள்ள ஆடு, மாடு வெட்டும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆடு வெட்டும் இடங்களில் மருத்துவர்கள் சான்றிதழ் பெற்று அவற்றை வெட்ட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.