நாகர்கோவில்: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

1701பார்த்தது
நாகர்கோவில்: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை பகுதியில் வியாழக்கிழமை மாலை ரயில் மோதி முதியவர் உயிரிழந்தார். தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரித்தபோது, அவா் முளகுமூடு பகுதியைச் சோ்ந்த ரெத்தினதாஸ் (84) எனத் தெரியவந்தது. இது குறித்து, நாகா்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.