குமரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தேவையான கரும்புகள் நாகர்கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளன. மதுரை, மேலூர் போன்ற பகுதிகளில் இருந்து லாரிகளில் கரும்புகள் கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. அங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் கரும்புகள் விநியோகிக்கப்படுகின்றன.