நாகர்கோவிலில் அவ்வை சண்முகம் சாலையில் மின்மாற்றி அருகே இருந்த தென்னை மரம் திடீரென மின் ஒயர்கள் மீது சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி போலீசார் போக்குவரத்தை தடை செய்தனர். தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.