நாகர்கோவில்: தழுவிய மகாதேவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

84பார்த்தது
நாகர்கோவில்: தழுவிய மகாதேவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள தழுவிய மகாதேவர் கோயிலில் தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி நேற்று (நவம்பர் 28) சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. சிவபெருமான் மற்றும் நந்திப் பெருமாளுக்கு பல்வேறு வகை நறுமணப் பொருட்களினால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.