கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையின் 60வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இன்று சாலை பாதுகாப்பு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கலந்துகொண்டு, சைக்கிள் ஓட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். நாகர்கோவிலில் தொடங்கி கன்னியாகுமரி வரை சென்ற இந்த பேரணியில், சுமார் 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெரியவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.