நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் (டிச. 2) நாளையும் (டிச. 3) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என்பதால், நாகர்கோவிலில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.