நாகர்கோவிலில் தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
நாகர்கோவிலில் தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் கருங்கல் கிளை சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். நாகர்கோவில், கருங்கல் கிளை நிர்வாகிகள் சிபு, சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கிராமங்களில் வாழும் உள்நாட்டு மீனவர்களுக்கு கடலோர பகுதிகளில் செயல்படுத்தும் வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள மீன் சந்தைகளில் குத்தகை பிடிக்கும் உரிமையை மீனவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். 

அணை மற்றும் குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை கிராம பகுதிகளில் வாழும் உள்நாட்டு மீனவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நிர்வாகிகள் ஜான் போஸ்கோ, நெல்சன் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you