தமிழக சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு கன்னியாகுமரி மாவட்டம் வந்த அமைச்சர் ராஜேஷ்குமார், இன்று நாகர்கோவிலில் உள்ள ராமவர்மபுரம் அரசு பயணிகள் விடுதிக்கு வருகை தந்தார். அங்கு அவரை கன்னியாகுமரி ஆட்சியர் அழகு மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அமைச்சர் ராஜேஷ்குமார் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.