கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கோட்டார் கேட்ட வரம் தரும் புனித சவேரியார் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று நடைபெற்ற தேர்பவனியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களுக்காக கும்பிடு நமஸ்கார நேர்ச்சைகளை செய்தனர். இந்த திருவிழா பக்தர்களின் ஆன்மீக நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.