குமரி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று செட்டிக்குளம், கோணம், பார்வதிபுரம், ஒழுகினசேரி பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருத்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 147 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 10 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.