புத்தேரியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.

1பார்த்தது
புத்தேரியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.
நாகர்கோவில் புத்தேரி நான்குவழிச் சாலையோரம் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடப்பதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபர் மூச்சு பேச்சின்றி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்தனர். உயிரிழந்தவர் மேல்புறம் ஆர். சி. சர்ச் தெருவைச் சேர்ந்த தொழிலாளி கிஷோர் (53) என தெரியவந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி