குமரி மாவட்டம் கருங்கல்பகுதியைச் சேர்ந்த செல்வின், திருவனந்தபுரம் கோட்ட ரயில்வேயின் கூடுதல் கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன் திருவனந்தபுரம் கோட்ட மூத்த கோட்ட வணிக மேலாளராகவும், திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை கோட்டங்களில் மூத்த கோட்ட செயல்பாட்டு மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். ரயில்வே வாரிய விருது, பொது மேலாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற இவர், சீனாவின் அதிவேக ரயில் அமைப்புகள் குறித்த சிறப்புப் பயிற்சி பெற்றவர்.