அருமனை: பாடகருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்

0பார்த்தது
அருமனை: பாடகருடன் கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்
சிதறல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனஸ்வரா (19), நாகர்கோவிலைச் சேர்ந்த பாடகர் அஜீவ் கவுசிக் (23) என்பவரைக் காதலித்து, இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகி, கேரள மாநிலம் காட்டாகடையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று, பாதுகாப்பு கேட்டு அருமனை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி, இருவரும் மேஜர்கள் என்பதால் அனஸ்வராவுடன் அவரது கணவர் அஜீவ் கவுசிக்கை அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி