அருமனை:  மாமியாரின் பல்லை உடைத்த மருமகள்; போலீஸ் விசாரணை

69பார்த்தது
அருமனை:  மாமியாரின் பல்லை உடைத்த மருமகள்; போலீஸ் விசாரணை
அருமனை அருகே சிதறால் பகுதியை சேர்ந்த 55 வயது பெண்ணின் மகன் அதே ஊரை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். அப்போது மருமகள் தனது மாமியாரிடமிருந்து ரூ. 16 ஆயிரம் கடனாக வாங்கினார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மருமகள் வேறு ஒரு நபருடன் ஊரை விட்டுச் சென்று விட்டார். இந்த நிலையில் ஊரில் நடந்த ஒரு திருமண விழாவில் மருமகள் தனது 2வது கணவருடன் வந்திருந்தார். இதைப் பார்த்த மாமியார் மருமகளிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டார். இதில் மோதல் ஏற்பட்டு மருமகள் தனது 2வது கணவர், மேலும் இரண்டு நபருடன் சேர்ந்து மாமியாரைக் கடுமையாகத் தாக்கினர். இதில் மாமியாரின் இரண்டு பற்கள் உடைந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் அடுமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து மருமகள் உட்பட 4 பேரைத் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி