குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வெளியானது. இன்று அதிகாலை அருமனை போலீஸ் தலைமை காவலர் ஷிபு தலைமையில் புலியூர்சாலை பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமான டெம்போவை தடுத்து நிறுத்த முயன்றபோது, டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது, சாக்கு மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. போலீசார் ரேஷன் அரிசியுடன் வாகனத்தை அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.