கோடை விடுமுறையைக் கொண்டாட திற்பரப்பு அருவியில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுடன், தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். இதனால் அருவியில் குளிப்பதற்கும், நீச்சல் குளம் மற்றும் சிறுவர் பூங்காவிலும் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுலாப் பயணிகள் அதிக நேரம் அருவியில் செலவிட ஆர்வம் காட்டுவதால், அப்பகுதி வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.