குழித்துறை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் குழித்துறை நீதிமன்றச் சாலையில் பழக்கடை நடத்திவருகிறார். நேற்றுமுன்தினம் (டிச.20) இரவு 11 மணிக்கு ஜார்ஜ் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று (21-ம் தேதி) காலையில் வந்துப் பார்த்தபோது அவரது கடையில் பூட்டை உடைத்து, கடையினுள் இருந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம், 6 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் வகைகள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து ஜார்ஜ் களியக்காவிளை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அங்கு பூட்டை உடைக்கத் திருடன் பயன்படுத்திய கம்பி ஒன்று கிடந்தது. இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை போலீசார் ஆய்வுசெய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் ஜார்ஜ் கடைக்கு வந்து திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.