குளச்சல்: மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

0பார்த்தது
குளச்சல்: மாடியிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
குளச்சல், பனவிளை பகுதியை சேர்ந்த 64 வயதான ஞான சௌந்தரி, தனது சகோதரி ராஜம் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். நேற்று மாலை தனது ஆடுகளுக்கு ஆகாரம் கொடுக்க பக்கத்து வீட்டு மாடியில் ஏறி பலா மர தழைகளை பறித்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். அவரை மீட்டு குளச்சல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி