குலசேகரம்: நிதி நிறுவனததில் நகை மோசடி - வழக்கு பதிவு

0பார்த்தது
குலசேகரம்: நிதி நிறுவனததில் நகை மோசடி - வழக்கு பதிவு
குலசேகரம் மாமூடு பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன், அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 169 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்தார். நகையை திரும்ப எடுக்க சென்றபோது, சரியான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இது குறித்து ஜெயச்சந்திரன் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார். மேல் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, வங்கியில் நகை இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து மேலாளர் சுஜின், துணை மேலாளர் கார்த்திகா, கணக்கர் கவிதா ஆகியோர் மீது குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.