குமாரபுரம்: டாஸ்மாக் கடை அருகே முதியவர் மர்ம சாவு

1244பார்த்தது
குமாரபுரம்: டாஸ்மாக் கடை அருகே முதியவர் மர்ம சாவு
குமாரபுரம், மிக்கேல் நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான செல்வராஜ், இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு டாஸ்மாக் கடையில் மது அருந்தச் சென்றுள்ளார். நேற்று காலை டாஸ்மாக் கடை அருகே அவர் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். செல்வராஜை யாராவது கொலை செய்து வீசிச் சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி