மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட குழு சார்பில் மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனந்த சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களான அண்ணாதுரை, விஜய் மோகனன், ரவி மற்றும் நீலாம்பரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பலர் கலந்துகொண்டனர்.