குமரியில் நடக்கும் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்கு மத்திய அரசு சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நிகழ்வின் பெருமையை உலகறிய செய்யும் வகையில் மத்திய அரசு சிவாலய ஓட்ட சிறப்பு அஞ்சல் உறையை நேற்று 16ம் தேதி 12 வது சிவாலயமான திருநட்டாலம் கோயிலில் வெளியிட்டது. இந்த அஞ்சல் உறையில் சிவாலய ஓட்டம் குறித்த வரைபடம் இடம் பிடித்து உள்ளது. தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட சிவபக்தர்கள் சங்க தலைவர் பத்மகுமார் பெற்று கொண்டார்.