தக்கலை: நாய் குறுக்கே பாய்ந்த விபத்தில் ஏட்டு படுகாயம்

1307பார்த்தது
தக்கலை: நாய் குறுக்கே பாய்ந்த விபத்தில் ஏட்டு படுகாயம்
விழுந்தையம்பலம் பகுதியை சேர்ந்த தலைமை காவலர் ராஜ்குமார் (48), நேற்று வேலை முடிந்து வீடு திரும்பும் போது நாய் குறுக்கே பாய்ந்ததில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். கேரளபுரம் பகுதியில் நடந்த இந்த விபத்தில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது மனைவி சுனிதா அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி