தக்கலை: இளம் பெண்ணை மிரட்டிய பாஜக பிரமுகர் கைது

61பார்த்தது
தக்கலை: இளம் பெண்ணை மிரட்டிய பாஜக பிரமுகர் கைது
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கொற்றிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நாஞ்சில் ஜெயக்குமார். இவர் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட் போன்ற தொழில்களைச் செய்து வந்தவர். பின்னர் இவர் திமுக கட்சியில் ஐக்கியமானார். அப்போது இவரது தொகுதி திமுக எம்எல்ஏ மூலம் அரசியலில் தடம் பதித்தார். 

பின்னர் இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததுடன் திமுக கட்சி இவரை ஒதுக்கியது. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகிச் செயல்பட்டு வருகிறார். இவர் ஏற்கனவே நாகர்கோவிலில் கோட்டாறு பகுதியில் உள்ள ஒரு பெண் பல் மருத்துவ டாக்டரிடம் சில்மிஷம் காட்டியதாக பாதிக்கப்பட்ட டாக்டர் அளித்த புகாரின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். 

பின்னர் நாகர்கோவில் மற்றொரு பெண்ணிடமும் இதுபோன்று சில்மிஷ புகாரில் ஈடுபட்டு போலீசார் விசாரணை வளையத்தில் இருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இவர் இதுபோன்ற 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. 

தற்போது மீண்டும் தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் நெருங்கி பழகி அந்த ஆபாச வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட போவதாக மிரட்டியதால் சைபர் கிரைம் போலீசார் மூலம் தற்போது இவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
Job Suitcase

Jobs near you